இவையும்
வெட்சித்திணையா மென்கின்றது. (இ-ள்.)
மறங்கடைக் கூட்டியதுடிநிலை - போர்க்களத்து மறவரது மறத்தினைக் கடைக்கூட்டிய துடிநிலையும்; சிறந்த
கொற்றவை நிலையும் -அத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அத்திணைப்புறனே - அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம்
எ-று. ‘‘நித்திலஞ்செய்
பட்டமு நெற்றித் திலதமு
மொத்திலங் மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந்
துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
குடிநிரை பாராட்டக் கொண்டு.’’ இஃது
இருவகை வெட்சிக்கும் பொது, நிரை
கொண்டோர்க்கும் மீட்டோர்க்கும்
துடிகொட்டிச் சேறலொத்தலின். ‘‘அருமைத் தலைத்தரு மானிரையு ளையை
யெருமைப் பலிகோ ளியைந்தா - ளரசனும்
வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்
றியாந்தன்மேற் சீறாம லின்று.’’ இதனானே வருகின்ற
வஞ்சித்திணைக்குங் கொற்றவைநிலை காரணமாயிற்று,
தோற்றோர்க்குக்
கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும்
மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும்
வழிபடு வராதலின். இனிக்
கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:- ‘‘நச்சிலைவேற் காளைக்கு
நாளையே கொற்றவை
கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் -
மிச்சில்கூர்
வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத்
தாளின்வாய் வீழ்த்தான் றலை.’’ இஃது
உயிர்ப்பலி; இது பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. ‘‘ஆடிப்பண் பாடி
யளவின்றிக் கொற்றவை
பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய
தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த
தாளுழலை யடுவோன் றாள்.’’ இது
குருதிப்பலி; பொதுவகையான்
இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. புறத்திணை
வழுஏழ் ஆவன
|