மாயோன்
மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலுஞ்
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந்
தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று
இருவகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங்
காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட வெழுமூன்றுதுறைத்தே இது
முன் இருபெருவேந்தர்க்கும்
போர்செயத் தொடங்குதற் குரியபொதுநிலமை
கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்
கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின் வழீஇத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும், புறத்திற்
கெல்லாம் பொதுவாய் வருவனவு மாதலிற் பொதுவியலுமாயின. (இ-ள்.)
வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச்
செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்;
வெவ்வாய் வேலன் - உயிர்க் கொலை கூறலின்
வெவ்வாயினையும் உடையனாகிய
வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும் -
தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்; செவ்வேள்வேலைத்
தான் ஏந்தி நிற்றலின் வேலனென்றார்.காந்தள் சூடி
ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக்
கூறினமையிற் கணிக் காரியையுங்
கொள்க. காந்தளையுடைமையானும்
பனந்தோடு உடைமையானும் மகளிரை
வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும்
வேலன் ஆடுதலே பெரும்பான்மை;
ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை என்றுணர்க. உ-ம்: ‘‘அமரகத்துத்
தன்னை மறந்தாடி யாங்குத்
தமரகத்துத் தன்மறந் தாடுங் - குமரன்முன்
கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா
ரேர்க்காடுங் காளை யிவன்.’’ இது
சிறப்பறியா மகளிராடுதலிற்
புறனாயிற்று; வேலனாடுதல் அகத்திணைக்குச்
சிறந்தது. உ-ம்: ‘‘அணங்குடை நெடுவரை யுச்சியின்
இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென அறியா மறுவரற் பொழுதில்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர்
|