அதுவாய்
கூறக்
களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்
ஆர நாற வருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து
நக்கனெ னல்லனோ யானே யெய்த்த
நோய்தணி காதலர் வரவீண்
டேதில் வேலற் குலந்தமை கண்டே.’’
(அகம்.22) ‘‘பனிவரை நிவந்த’’
என்னும் (அகம்.98) பாட்டும் அது. இவற்றுள்
சேயோன் கருப்பொருளாக மைவரை
யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய காந்தள் அகத்திற்கு
வந்தது, இது வேத்தியற் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின்
வழுவுமாய் அகத்திற்கும்
புறத்திற்கும் பொதுவாதலிற்
பொதுவியலுமாயிற்று. ‘‘வேலன் றைஇய வெறியயர் களனும்’’
(பத்து.முருகு.222) என்றாற் போலச் சிறப்பறியும்
வேலன் தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க. மாவரும்
புகழ் ஏந்தும் பெருந்தானையர் - மாமுதலியன வற்றான் தமக்கு வரும் புகழைத்
தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்; உறு
பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை
வேம்பே ஆர் என மலைந்த பூவும் -
அப்புகழ்தான் உறும்பகையிடத்து
இன்ன வேந்தன் படையாளர வென்றார் என்பதற்கு
ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு
ஆரென்று கூறிச் சூடின பூவும்; இதன்
கருத்து, ஏழகத்தகரும் யானையும் நாயும் கோழியும் பூழும் வட்டும் வல்லுஞ் சொல்லும் முதலியவற்றான்
தமக்கு வரும் வெற்றிப் புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் படைத்தலைவர் தம்முண் மாறாய்
வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர்
வென்றாரென்றற்கு
அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பதூஉம்.
அக்கூத்தும் வேத்தியற் கூத்தின் வழிஇயின
கருங்கூத் தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்பதூஉம் உணர்த்தியதாம். இதனை இங்ஙனந் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது
தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற்
பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும்
வள்ளிக்கூத்திற்கும் இடையே இதனை வைத்தது
இக்கருத்தானேயென்றுணர்க. உ-ம்: ‘‘ஏழக
மேற்கொண்
|