நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3862
Zoom In NormalZoom Out


லை மற்றவன்
புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே’’
     (புறம்.308)
  

இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங்கண்டது.  

‘‘கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றி
னாட்செருக் கனந்தார்த் துஞ்சு வோனே
யவனெம் மிறைவன் யாமவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
னிரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
டீவதி லாள னென்னாது நீயும் நின்
வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்
சென்றுவாய் சிவந்து மேல்வருக
சிறுகண் யானை வேந்துவிழு முறவே’’      
(புறம்.316)
  

இது மறவன் ஆரமரோட்டல் கூறியது.  

இவை தன்னுறுதொழில் கூறியன.  

இவை புறம்.  

ஆரமரோட்ட  லென்பது  பொதுப்படக்   கூறவே,  வேந்தர்க்கு
உதவியாகச் செல்வோரையுங் கொள்க.
  

உ-ம்:  

‘‘வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப்
புள்ளூன்றின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை யுடையின் சுரையுடை வான்முள்
ளூக நுண்கோற் செறித்த வம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீஇய வங்குடி சீறூர்க்
குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வண்காற் பந்த
ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரோ டிருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்
குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே’’     
(புறம்.324)
  

இது புறம். வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது.  

‘‘இணைப்படைத் தானை யரசோ டுறினுங்
கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி
னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை
மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி
யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்’’         
(கலி.15)
  

எனக் கலி அகத்தும் வந்தது.  

‘‘வயங்குமணி பொருத’’ என்னும் (197) அகப்பாட்டினுள்  

‘‘சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்
ததர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்’’                   
(அகம்.167)
  

எனச்   சாத்தெறிதலும்    அது    -   இங்ஙனம்   பொதுவாதலிற்
பொதுவியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று.
  

ஆ   பெயர்த்துத்  தருதலும். வெட்சிமறவர் கொண்ட நிரையைக்
குறுநிலமன்னராயினுங்     காட்டகத்து     வாழும்   மறவராயினும்
மீட்டுத்தருதலும்;
  

உ-ம்:  

‘‘ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே’’
   (புறம்.259)