இது குறுநில
மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது. ‘‘வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோள் உளருங் கூந்த னோக்கிக் களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண கேண்மதி யாணரது நிலையே புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந் தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டுங் கையுள போலுங் கடிதன் மையவே முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணை யாக வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லா னிரையொடு வந்த வுரைய னாகி யுரிகளை யரவின் மானத் தானே யரிதுசெலுலகிற் சென்றன னுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய விலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே உயரிசை வெறுப்பத் தோன்றிப் பெயரே மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி யிடம்பிறர் கொள்ளாச் சிறுநெறிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே’’
(புறம்.260) இதுனுள்
‘தன்னூ’ரென்றலிற் குறுநில மன்னன் நிரைமீட்டுப்பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது. ஏனைய
வந்துழிக் காண்க. இனிக்
கண்டோரும் மறவருங் கூத்தரும்
பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாம் கையற்றுக்
கூறினும், அத்துறைப் பாற்படும். உ-ம்: ‘‘பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் இரும்பறை யிரவல சேறி யாயிற் றொழாதனை கழித லோம்புமதி வழாஅது வண்டுமேம் படூஉம் வறநிலை யாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே’’ (புறம்.263) இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய
வந்துழிக் காண்க. ‘‘விசும்புற நிவந்த’’
என்னும் (131) அகப்பாட்டும் அது. இதனுள்
‘‘மறவர் நாளா வுய்த்த’’என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற்
கரந்தைக்கண்ணே கொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின். ‘தருத’ லென்ற மிகையானே
நிரையல்லாத கோடலும் அத்துறைப்பாற்படும். ‘‘வலஞ்சுரி மராஅத்து’’
(அகம்.83) என்னுங் களிற்றியானை நிரையுள், ‘‘கறையடி மடப்பிடி கானத்
தலறக்
|