இது
முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்றுதுறைத் தென்கிறது. (இ-ள்)
இயங்கு படை
அரவம் - இயங்குகின்ற இருபடையெழுச்சியின் ஆர்ப்பரவமும்; உ-ம்: ‘‘விண்ணசைஇச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்த. னெண்ண மொருபாற் படர்தரக்கண் டொன்னார்த முள்ள மிருபாற் படுவ
தெவன்.’’
(பெரும்பொருள் விளக்கம்.
புறத்திரட்டு.1255 -பகைவயிற் சேறல் 4) ‘‘சிறப்புடை
மரபிற் பொருளு மின்பமும்’’ என்னும்
புறப்பாட்டும் (31) அது. ‘‘இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாட் கடிமரத்தாற் களிறணைத்து நெடுநீர துறைகலங்க மூழ்த்திறுத்த வியன்றானையொடு புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாண்மதி லாகவேன்மிளை யுயர்த்து வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற் செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் காரிடி யுருமி னுரறுபு முரசிற் கால்வழங் காரெயில் கருதிற் போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.’’
(பதிற்றுப்.33) இப் பதிற்றுப்பத்தும் அது. ‘‘போர்ப்படை
யார்ப்பப் பொடியா யெழுமரோ பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்த - னூர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிய நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது.’’ இஃது
எதிர்செல்வோன் படையரவம். எரிபரந்து
எடுத்தல் - இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்; இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க.
|