நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3872
Zoom In NormalZoom Out


இய மதின்மர முருக்கி
நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி
னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்’’
        (பதிற்றுப்.15)
 
 

என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற்படும்.  

மாராயம்   பெற்ற நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப்பெய்திய
அதனாற்   றானேயாயினும்   பிறரேயாயினுங்  கூறும்  மீக்  கூற்றுச்
சொல்லும்;
  

சிறப்பாவன  ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும் ஊரும்
முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படை வேண்டியவாறு செய்க
என்றது.  இஃது  அப்படைக்கு  ஒருவனைத்  தலைவனாக்கி  அவன்
கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது.
  

உ-ம்:  

‘‘போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாந்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே
ரேனாதிப் பட்டத் திவன்.’’
  

இது பிறர் கூறிய நெடுமொழி.  

‘‘துடியெறியும் புலைய
வெறிகோல் கொள்ளு மிழிசின
கால மாரியி னம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
பொலம்புனை யோடை யண்ணல் யானை
யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு
மோடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந்
தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசின் மகளிர் மன்ற னன்று
முயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால்
வம்ப வேந்தன் றானை
யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே.’’
       (புறம்.287)

  

இது   தண்ணடை பெறுகின்றது சிறிது; சுவர்க்கம் பெறுதல் நன்று
என்று  நெடுமொழி  கூறியது.போர்க்களம் புக்கு நெடுமொழி கூறலும்
ஈண்டு அடக்குக.
  

பொருளின்று   உய்த்த பேராண் பக்கமும் - பகைவேந்தரை ஒரு
பொருளாக மதியாது படையினைச்  செலுத்தின பேராண்மை செய்யும்
பகுதியும்;
  

உ-ம்:  

‘‘மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணல் யானை