செறுவினை
மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த செழுந்செந் நெல்லி
னம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தேற் றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின்
உலந்தனர் பெருமிநின் னுடற்றி யோரே
யூரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்புசுடு கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி
லாரெயிற் றோட்டி வௌவினை யேற்றொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கவப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையோ டருங்கலந் தரா அர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
யறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே’’
(பதிற்றுப்.71) என
வரும். ‘‘இருங்கண்
யானையோ டருங்கலந் தெறுத்துப்
பணிந்துகுறை மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே.’’
(பதிற்றுப்.) இதுவும் அது. இவை
பதிற்றுப்பத்து. தோற்றோர்
தேய்வும் -அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு கூறுதலும்; உ-ம்: ‘‘வாஅன் மருப்பிற் களிற்றியானை
நிரை
மாமலையிற் கணங்கொண்டவ
ரெடுத்தெறிந்த விறன்முரசங்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்
றொடிசுடிர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா
ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ
யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென
வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
வனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசை
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே’’ (பதிற்றுப்.80) என வரும். இது
பதிற்றுப்பத்து. குன்றாச்
சிறப்பிற் கொற்ற வள்ளையும் - வேந்தனது
குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர்
நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக்
கூறும் வள்ளைப்பாட்டும்; வள்ளை.
உரற்பாட்டு. கொற்றவள்ளை, தோற்ற
கொற்றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும்
உளர். உ-ம்: ‘‘வேரறுகு
பம்பிச் சுரைபரந்து வேளைபூத்து
ஊரறிய லாகா கிடந்தனவே - போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
அகையிலைவேல் கா
|