சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும்’’ (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு 1330.எயில்கோடல் 9) என வரும். கடைஇச் சுற்று
அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் - புறத்தோன் தன்
படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன் படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு, உள்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும்; அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினை முதிர்ச்சியும்; உ-ம்: ‘‘கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு’’ இது புறத்தோன் முற்றிய முதிர்வு. ‘‘ஊர்சூழ் புரிசையுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து’’ இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு. அன்றி
முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும். புற மதிலிலன்றி உள்மதிற்கட் புறத்தோனான் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில்காவலும்; அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்; நொச்சியாவது
காவல்.இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க; அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்கு மாயிற்று. இக்கருத்தானே ‘‘நொச்சி வேலித் தித்த னுறந்தை’’ (அகம்.122) என்றார் சான்றோரும். உ-ம்: ‘‘இருகன்றி னொன்றிழந்த வீற்றாப்போற் சீறி யொருதன் பதிசுற் றொழியப் - புரிசையின் வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று’’ இஃது அகத்துழிஞையோன் எயிற்காத்த நொச்சி. ‘‘தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு.’’ (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1328.எயில்கோடல் 7) இது புறத்தோன் மனங்காத்த நொச்சி. ‘‘மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சிப் போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த காத னன்மர நீமற் றிசினே கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த தொடியணி மகளி ரல்குலுங் கிடத்தி காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலி னூர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே’’
(புறம்.272) இது சூடின நொச்சியைப்
|