புகழ்ந்தது. மற்று
அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடைமதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம் மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக்கோளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்; பிற்பட்டதுறைக்குப்
புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர் கூறினார். உ-ம்: ‘‘வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா லஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின வான்றோ ரடக்கம்போ லாங்கு’’ (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1329.எயில்கோடல்8) இது புறத்தோன் வீழ்ந்த புதுமை. ‘‘தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத் தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க ணிடி புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா ரடிபிறக் கீடு மரிது’’
(தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1341.எயில்காத்தல் 7) இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை. நீர்ச்
செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத் தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட்போரை விரும்பின பாசியும்; ‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’ யென்றார். உ-ம்: ‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’ இஃது இருவருக்கும் ஒக்கும். வேறு வேறு வருமெனினுங் காண்க. அதா
அன்று ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்; பாசியென்றார்,
நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். உ-ம்: ‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’ இது புறத்தோன் பாசிமறம். ‘‘தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று’’ இஃது அகத்தோன் பாசிமறம். அகமிசைக்கு இவர்ந்தோன்
பக்கமும் - புறஞ்சேரிமதிலும் ஊரமர்மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறிநின்று போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்; உ-ம்: ‘‘வாயிற் கிடங்கொடு
|