க்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து’’ இது புறத்தோன் அகமிசைக்கிவர்தல். ‘‘புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவ னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக்
கூடாத போரெயின்மேல் வாழவுணர் போன்று’’ இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்தல். இகன்மதிற் குடுமி கொண்ட
மண்ணு மங்கலமும் - அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடியுனைந்து நீராடும் மங்கலமும்; உ-ம்: ‘‘மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து’’ இது புறத்தோன் மண்ணு மங்கலம். ‘‘வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர்’’ இஃது அகத்தோன் மண்ணு மங்கலம். வென்ற
வாளின் மண்ணோடு ஒன்ற-இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற
கொற்றவாளினைக் கொற்றவைமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட; உ-ம்: ‘‘செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன் பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு’’ இது புறத்தோன் வாண்மங்கலம். ‘‘வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூ ரீந்தா - ளொருவன்வா’’ ‘‘ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா ளவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு’’ இஃது அகத்தோன் வாண்மங்கலம். ஒன்றெனமுடித்தலான்
இருவர் வேற்குஞ் சிறபான்மை மண்ணுதல் கொள்க. ‘‘பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே யிரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூட்டி யின்குர லிரும்பை யாழெடுத் தியம்ப தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் கிருங்கடற் றானை வேந்தர்
|