நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3894
Zoom In NormalZoom Out


னாகுமால் பிற்பிற்
பலர்புகழ் செல்வந் தருமால் பலர்தொழ
வானக வாழ்க்கையு மீயுமா லன்னதோர்
மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ
தானேயும் போகு முயிர்க்கு.’’

           (தகடூர் யாத்திரை புறத்திரட்டு.1315.படைச்.9)

என வரும்.  

‘‘கோட்டாங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலு
மொத்தன்று மாதோ விவற்கே செற்றிய
திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன்
வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி
யோம்புமி னோம்புமி னிவணென வோம்பாது
தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக்
கன்றமர் கறவை மான
முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே.’’
   (புறம்.275)

இஃது உதவியது.  

இனி    யானைநிலைக்குங்  குதிரைநிலைக்குந்   துறைப்பகுதியாய்
வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும்   படைத்தலைவர் மேலும்
ஏனையோர்   மேலும் யானை   சேறலுங்,  களிற்றின்மேலுந்  தேரின்
மேலுங்   குதிரைசேறலுந்,  தன்மேலிருந்து  பட்டோருடலை  மோந்து
நிற்றலும் பிறவுமாம்.
  

உ-ம்:  

‘‘மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற்
காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந்
தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேன்
மலையுறையுந் தெய்வம்போல் வந்து.’’
 

                (பெரும்பொருள்விளக்கம் 
                    புறத்திரட்டு.1401.யானை மறம்.14)

  

‘‘கையது கையோ டொருதுணி கோட்டது
மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை - பைய
வுயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன்
வயவெம்போர் மாறன் களிறு.’’
  

இவை யானைநிலை. 

‘‘பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன்
றொல்லை யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா
மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப்

பொருகளத்து வீழ்ந்து புரண்டு’’
  

‘‘மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
யிருபேர் யாற்ற வொருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
வுலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே’’
     (புறம்.273)

‘‘பருத்தி வேலிச் சீறூர் மன்ன
னுழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்திற்
றண்ணடைமன்னர் தாருடைப் புரவி
யணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.’’
    (புறம்.299)

இவை குதிரைநிலை.  

‘‘நிலம் பிறக்கிடுவது போல’’ என்னும் (303) புறப்பாட்டும் அது.  

இவை  தனித்து  வாராது  தொடர்நிலைச்  செய்யுட்கண்  வரும். அவை தகடூர்யாத்