திரையினும்
பாரதத்தினுங் காண்க. புறநானூற்றுள் தனித்து
வருவனவுங் கொள்க. வேன்மிகு
வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்
மீண்டெறிந்த
தார்நிலை - தன்படை
போர்செய்கின்றமை கண்டு
தானும்
படையாளர்க்கு முன்னேசென்று
வேலாற் போர்செய்து வென்றி
மிகுகின்ற வேந்தனை
மாற்றோர்
சூழ்ந்துழி, அதுகண்டு
வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத்
தலைவனாயினும் தனக்குத்
துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு
வந்து வேந்தனொடு
பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்; தாரென்பது
முந்துற்றுப்
பொரும்படையாதலின் இது
தார்நிலையாயிற்று. உ-ம்: ‘‘வெய்யோ
னெழாமுன்னம் வீங்கிருள் கையகலச்
செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே - கையகன்று
போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன்
றார்தாங்கி நின்ற தகை.
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1363.தானைமறம்.4) என வரும். ‘‘நிரப்பாது கொடுக்கும்’’
என்னும் (180) புறப்பாட்டினுள்
‘‘இறையுறு விழுமந் தாங்கி’’ என்பதும் அது. ‘‘இவற்கீத்
துண்மதி கள்ளே சினப்போ
ரினக்களிற்றி யானை யியறேர்க் குரிசி
னுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
யெடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்ச
னடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனு
முறைப்புழி யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.’’
(புறம்.290) இதுவும்
அதன்பாற்படும். அன்றியும்
இருவர் தலைவர் தபுதிப்பக்கமும். இருபெரு
வேந்தர்
தானைத்தலைவருந்
தத்தம் வேந்தர்க்காகித் தார்தாங்குதலே
யன்றி
அத்தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற்
கண்ணும்; பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர்
வீழ்தலுங் கொள்க. உ-ம்: ‘‘ஆதி சான்ற
மேதகு வேட்கையி
னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின்
மதியமு ஞாயிறும் பொருவன போல
வொருத்தி வேட்கையி னுடன்வயிற்றிருவர்
செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு
மரவணி கொடி யோற் கிளையோன் சிறுவனும்
பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு
முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா
ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படைவழங்கி
யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித்
தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை
நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந்
தும்பியடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு
கொடிகொடி பிணங்கி வீழ்வன போல
வொருவயின் வீழ்ந்தடு காலை
யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே.’’ இப்
பாரதப்பா
|