நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3908
Zoom In NormalZoom Out


மூதறி வாள
நீயே யொருதனித் தோன்ற லுறைபதி
யாருமி லொருசிறை யானே தேரி
னவ்வழி வந்தநின் னுணர்வுமுதற் றங்குந்
தொன்னெறி மரபின மூவகை நின்றன
காலமு நின்னொடு வேறென
யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே’’
  

என வரும்.  

‘‘வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு
மருளின் றீந்தே னுரைந்துநனி ஞெகிழ்ந்து
மலரினு மெல்லி தென்ப வதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கிநிமிந் தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே.’’
 
 

இதுவும் அது.  

கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க.  

நாலிருவழக்கிற்     றாபதப்  பக்கமும்  -  அவ்வறிவர்  கூறிய
ஆகமத்தின்வழி நின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை
மார்க்கத்துத் தவம்புரியுங் கூறும்;
  

‘வழக்’கென்றதனான்  அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந்
தவஞ்செய்து  யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று
கொள்க.
  

அவற்றுள்     தவஞ்செய்வார்க்கு    உரியன.  ஊணசையின்மை,
நீர்நசையின்மை,  வெப்பம்  பொறுத்தல்,  தட்பம்  பொறுத்தல், இடம்
வரையறுத்தல்,   ஆசனம்   வரையறுத்தல்,  இடையிட்டு  மொழிதல்,
வாய்வாளாமை  என எட்டும். இவற்றிற்கு, உணவினும் நீரினுஞ் சென்ற
மனத்தைத்  தடுத்தலும்,  ஐந்தீநாப்பணும்  நீர்நிலையினும்  நிற்றலுங்,
கடலுங்   காடும்   மலையும்  முதலியவற்றில்  நிற்றலுந்,  தாமரையும்
ஆம்பலும்  யாமையும்  முதலிய  ஆசனத்திருத்தலும், உண்டற்காலை
உரையாடாமையுந்,     துறந்தக்காற்றொட்டும்     வாய்வாளாமையும்
பொருளென்றுணர்க.
  

இனி     யோகஞ்செய்வார்க்குரியன.  இயமம்  நியமம்  ஆசனம்
வளிநிலை  தொகைநிலை  பொறைநிலை  நினைதல்  சமாதி என்னும்
எட்டும் ஆம். இவற்றை,
  

‘‘பொய்கொலை களவே காமம் பொருணசை
யிவ்வகை யைந்து மடக்கிய தியமம்.’’
  

‘‘பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு

நயனுடை மரபி னியம மைந்தே’’
  

‘‘நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென்
றொத்த நான்கி னொல்கா நிலைமையோ
டின்பம் பயக்குஞ் சமமே முதலிய

வந்தமில் சிறப்பி னாசன மாகும்’’
  

‘‘உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை’’
  

‘‘பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம
லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே’’
  

‘‘மனத்தினை யொருவழி நிறுப்பது