லி தோயு மிமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன
வோடை நுதல வொல்குத லறியாத்
துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா வீகைத் தகைவெய் யோயே’’
(புறம்.369) என வரும்.
‘‘நளிகட லிருங்குட்டத்து’’
என்னும்(26) புறப்பாட்டுப் பலி
கொடுத்தது. களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது.
‘‘ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா
யாவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து’’
(களவழி நாற்பது.36) என வரும்.
தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் - தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பானே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரொடு கை பிணைத்தாடுங் குரவையானும்; உ-ம்:
‘‘சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க
வாடிய கூத்தரின் வேந் தாடினான் வீடிக்
குறையாடல் கண்டு வந்து கொற்றப்போர் வாய்த்த
விறையாட வாடாதார் யார்’’
‘‘விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன் றுமேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே’’
(பதிற்றுப்.56) என வரும்.
ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும் - தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே, தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவையானும்; உ-ம்:
‘‘வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின்
கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப
வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
கொண்டா டினகுரவைக் கூத்து’’
(பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு.1430.களம்.12) என வரும்,
‘‘களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி
விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
குடர்த்தலைத் துயல்வரச் சூடிப் புணர்த்தின
மானாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பலவென
வுருகெழு பேஎய்மக ளயரக்
குருதித்துக ளாடிய களங்கிழ வோயே’’
(புறம்.371) என்பதும் அது.
|