நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3929
Zoom In NormalZoom Out


னூர்ப் பழுனிய கோளியா லத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கெனநாளு
மானாது புகழு மன்னை
யாங்கா குவள்கொ லளியள் தானே’’
         (புறம்.254)

என வரும்.

கழிந்தோர்  தேஎத்து அழிபடர்உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு
நிலையும் - கணவனொடு மனைவியர் கழிந்துழி அவர்கட்பட்ட அழிவு
பொருளெல்லாம்  பிறர்க்கு  அறிவுறுத்தித்  தாம் இறந்துபடாதொழிந்த
ஆயத்தாரும்  பரிசில்  பெறும்  விறலியருந் தனிப்படருழந்த செயலறு
நிலைமையானும்;

ஒழிந்தோரெனவரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும்
அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோ ரென்ற பன்மையான்
ஆண்பாலுந்     தழீஇயினார்,     கையறுநிலை     அவரையின்றி
அமையாமையின்.   ஆண்பாற்   கையறுநிலை  மன்னைக்காஞ்சியுள்
அடங்கும். அழிவாவன புனல்விளையாட்டும், பொழில் விளையாட்டுந்,
தலைவன்வென்றியும் போல்வன.

உ-ம்:

‘‘தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற்
றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா
வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ

வலகற்ற கற்பி னவள்’’                     
(பாரதம்)

என வரும்.

காதலி   இழந்த    தபுதார   நிலையும் -  தன்   மனைவியைக்
கணவனிழந்த தபுதார நிலையானும்;

என்றது     தாரமிழந்த நிலை  -  தன்  காதலியை  இழந்தபின்
வழிமுறைத்தாரம்   வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும்,
எஞ்
ஞான்றும்   மனைவியில்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனா யினும்,
அது  காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன்
மரபென்றற்குங்,  ‘காதலியிழந்த  நிலை’யுமென்றே  ஒழியாது, பின்னுந்
தபுதார    நிலையு   மென்றார்.   தலைவர்   வழிமுறைத்   தாரமும்
எய்துவாராதலின்  அவர்க்கு நிலையாமை சிறப்பின்மையின் ஆண்பாற்
காஞ்சியன்றாயிற்று.

இஃது யாக்கையும் இன்பமும் ஒருங்குநிலையின்மையாம்.

உ-ம்:

‘‘யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே
யுயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை
யின்னும் வாழ்வ லென்னிதன் பண்பே’’       
(புறம்.245)

என வரும்.

காதலன் இழந்த தாபதநிலையும்  -  காதலனை  யிழந்த  மனைவி
தவம் புரிந்தொழுகிய நிலைமையானும்;

இருவரும் ஓருயிராய்த்    திகழ்ந்தமையின்   உயிரும்   உடம்பும்
இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம்.

இதனை இல்லறம் இழத்தலி