னா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த
கல்லாக் காளையை யீன்ற வயிறே’’
(தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1407.மூதின்மறம்.4)
இத் தகடூர்யாத்திரை கரியிடை
வேலொழியப் போந்ததற்குத் தாய் தப வந்த தலைப்பெயனிலை.
‘‘எற்கொண் டறிகோ வெற்கொண் டறிகோ
வென்மக னாத லெற்கொண் டறிகோ
கண்ணே கணைமூழ் கினவே தலையின்
வண்ண மாலையும் வாளிவிடக் குறைந்தன
வாயே, பொங்கு நுனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித்
தாவ நாழிகை யம்புசெறிந் தற்றே
நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே
நிறங்கரந்து பலசரம் நிரைத்தன வதனா
லவிழ்பூ வப்பணைக் கிடந்தோன்
கமழ்பூங் கழற்றீங் காய்போன் றனனே’’
இத் தகடூர்யாத்திரை துறக்கத்துப்
பெயர்ந்த நெடுங்கேரளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை.
‘‘நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே’’
(புறம்.278) இப் புறப்பாட்டு மீண்டது.
‘‘ஈன்று புறந்தருதல்’’ என்னும் (312) புறப்பாட்டும்
அது.
மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு-அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிதுணரும்படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துதலானும்; உ-ம்:
‘‘உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப்
பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு
புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ
டிகனெடுவே லானை யிழந்து’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1439.இரங்கல்4) என வரும்.
‘‘களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூஉங் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கிற் பேஎய் மகளிரோ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதல ரழுத கண்ணீ
ரென்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப
எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து
மன்பதைக் கெல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே’’
(புறம்.356) இதுவும் அது.
தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப - தொகைபெற்றுக்
|