நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3932
Zoom In NormalZoom Out


காஞ்சி     பத்துவகைப்படுமென்று  கூறுவர்  ஆசிரியர்;  நிறையருஞ்
சிறப்பிற்   றுறை   இரண்டு   உடைத்தே  -  ஆதலான்  அக்காஞ்சி
நிறுத்தற்கு    எதிர்    பொருளில்லாத   பெரிய   சிறப்பினையுடைய
ஆண்பாற்றுறையும்     பெண்பாற்றுறையுமாகிய     இரண்டு
துறையினையுடைத்து எ-று.
  

எனவே,     முற்கூறிய   பத்தும்  இப்பத்துமாக  இருபதென்பதுங்
கூறினாராயிற்று.    ‘நிறையருஞ்    சிறப்பெ’ன்றதனானே   மக்கட்குந்
தேவர்க்கும்   உள்ள   நிலையாமையே   காஞ்சிச்  சிறப்புடைத்தாகக்
கூறப்படுவது;    ஏனை   அஃறிணைப்பகுதிக்கணுள்ள   நிலையாமை
காஞ்சிச் சிறப்பன்று என்றுணர்க.                            (24)
  

பாடாண்டிணை கைக்கிளைப் புறனாதலும்
இத்துணைப் பொருளுடைத்தாதலும்
 

80.

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.

 

இது  மேற்  புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் (தொல்.
புறத்திணை1) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதி நின்ற
பாடாண்டிணைக்குப்  பொது  விலக்கணம்  உணர்த்துவான்  அதற்குப்
பெயர்  இன்ன  தெனவும், அது கைக்கிளைப் புறனாமெனவும், அஃது
இத்துணைப் பொருளுடைத்தெனவுங் கூறுகின்றது.

(இ-ள்.)  பாடாண்பகுதி கைக்கிளைப் புறனே - பாடாணெனப்பட்ட
புறத்திணையது  கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத்திணைக்குப்
புறனாம்;   நாடுங்காலை   நாலிரண்டு   உடைத்து   தன்னை நாடிச்
சொல்லுவார்  செய்யுளுண்  முடிந்த  பொருள் பாடாணாகவே நிறுப்ப
நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து எ-று.

பாடாணென்பது      பாடுதல்     வினையையும்    பாடப்படும்
ஆண்மகனையும்    நோக்காது.    அவனதொழுகலாறாகிய   திணை
யுணர்த்தின
மையின்   வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை.  ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன்
வீடுபேறு  முதலிய  பரிசில்  வேண்டலின் அவை தம்மின் வேறாகிய
ஒருதலைக்  காமமாகிய  கைக்கிளையோ  டொத்தலிற் பாடாண்டிணை
கைக்கிளைப்  புறனாயிற்று.  வெட்சி  முதலிய   திணைகளுஞ்  சுட்டி
யொருவர்    பெயர்   கொடுத்துங்    கொடாதும்    பாடப்படுதலிற்
பாடாண்டினையாயினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர்
பெறுபுகழ் பிறரை  வேண்டிப்  பெறுவதன்றித்  தாமே  தலைவராகப்
பெறுதலின்,   அவை  கைக்கிளைப்புறன்  ஆகாமை  உணர்க.  இவ்
விருகூறுந்  தோன்றப்  ‘பகுதி’    யென்றார்.    புகழை   விரும்பிச்
சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக்கிளைப் புற