ன் ஆகாவென உணர்க. இதனானே
புறத்திணை ஏழற்கும் பெயரும் முறையும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று.
நாலிரண்டாவன இப்பாடாண் டிணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும் இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞையுந் தும்பையும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம். இனி
இக்கூறிய ஏழு திணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு ‘காட்டுங்கால் எல்லாத்
திணையும் ஒத்தவாயினும், அவை பெரும் பான்மையுஞ் சிறுபான்மையுமாகி
வருதலும் இவை இரண்டும் பலவும் ஒருங்கு வருதலும் பாடாண்டிணைக்கு மேற்கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க. உ-ம்: ‘‘முனைப்புலத்துக் கஃதுடை முன்னரைபோல் வேந்தூர்
முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - யெனைப்புலத்துஞ்
சென்றது நின்சீர்த்தி தேர்வளவ தெவ்வர்போ
னன்றுமுண் டாக நமக்கு’’ இது
கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம். ‘‘அவலெறி வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை இரிய வயிரைக்
கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு
மழியா விழவி னிழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடு
மகன்கண் வைப்பி னாடும னளிய
விரவுவேறு புலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பி றானை பரவா வூங்கே’’
(பதிற்றுப்.29) இதில்
இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடாணாயிற்று. ‘‘இலங்கு
தொடிமருப்பின்’’ என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞை
|