யாயினும் பதின் துலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று. ‘‘பார்ப்பார்க் கல்லது பணியறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம்
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை யாயினுங்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி
யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையே மென்றனர் நீயு
நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற்
செல்வக் கோவே சேரலர் மருக
காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி
னடையடுப் பறியா அருவீ யாம்ப
லாயிர வெள்ள வூழி
வாழி யாத வாழிய பலவே’’
(பதிற்றுப்.63) இது வாகைத் துறைப் பாடாண்பாட்டு. இப்
பதிற்றுப்பத்து நூறும்இவ்வாறே
வருதலிற் பாடாண்
டிணையேயாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க.
(25) ஒன்றன்பகுதியுள் தேவர்பகுதி தோன்றுமாறு
|