நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3935
Zoom In NormalZoom Out


ஆசிரியர் எ-று.  

அமரர்கண்ணே  வந்து  முடியுமெனவே அமரர் வேறென்பதூஉம்
அவர்கண்ணே  வந்து  முடிவன  வேறென்பதூஉம் பெற்றாம். அவை
முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும்  மழையும் முடியுடை வேந்தரும்
உலகுமாம்.  இவை  தத்தஞ்  சிறப்பு  வகையான்  அமரர்சாதிப் பால
வென்றல்  வேதமுடிவு. இதனானே பிறப்பு முறையாற் சிறந்த அமரரை
வாழ்த்தலுஞ்   சொல்லாமையே  முடிந்தது  தந்திரவுத்தி  வகையான்.
‘வகை’யென்றதனானே   அமரரை   வேறு  வேறு  பெயர் கொடுத்து
வாழத்தலும்  ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக்
கூறப்படாமையுங்  கொள்க.  ‘புரை’ உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத
காமமாவது    மறுமைப்பயன்   பெறுங்   கடவுள்வாழ்த்துப்   போல்
உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும்பயனாதலின், இழிந்த  பொருள்களிற்
செல்லும்    வேட்கைக்    குறிப்பு.    ‘புல்லிய    வகை’    யாவது,
அம்மனக்குறிப்புத்    தேவர்கண்ணே   பொருந்திய   கூறாது   தன்
பொருட்டானும்    பிறன்பொருட்டானும்   ஆக்கத்துமேல்   ஒருவன்
காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்தலாம். இது ஒன்றனுடைய
பகுதியென்க.   இத்துணைப்   பகுதியென்று  இரண்டிறந்தன  கூறாது,
வாளாதே  பகுதி  யென்றமையின்  தேவரும்  மக்களுமென இரண்டே
யாயிற்று,  அத்தேவருட்  பெண்டெய்வங்  ‘கொடிநிலை  கந்தழி’ (88)
என்புழி  அடங்கும்.  மக்களுட் பெண்பால் பாடுதல்  சிறப்பின்மையிற்
‘‘செயிர்தீர்   கற்பிற்   சேயிழை   கணவ’’  (புறம்.3) என்றாற்போலச்
சிறுபான்மை  ஆண்மக்களொடு படுத்துப் பாடுப. ‘வகை’யென்றதனான்
வாழ்த்தின்கண்  மக்கட்பொருளும்  உடன்தழுவினும்  அவை கடவுள்
வாழ்த்தாமென்று கொள்க.
  

உ-ம்:  

‘‘எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க்
கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றா
ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள்
காடமர்ந் தாடிய ஆடல னீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரல னிரண்டுருவாய்
ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரு
மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி

மாறேற்