நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3936
Zoom In NormalZoom Out


கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே’’      
(பதிற்றப்பத்து)
  

இது கடவுள் வாழ்த்து.  

தொகைகளிலும் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள்  வாழ்த்தெல்லாம்
இதன்கண் அடக்குக.
  

இனி அறுமுறை வாழ்த்து வருமாறு:
  

‘‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’’
                (குறள்.28)
  

‘‘கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை’’
              (குறள்.15)
  

‘‘நாகின நந்தி யினம்பொலியும்போத்தென
வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப ஆயர்
அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த
வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர்
மெல்லக் கடைவிடத்து நெய்தோன்ற நெய்பயந்து
நல்லமு தன்ன வளையாகு நல்ல
புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி
யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற்
காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி
யாவா ழியரோ நெடிது’’
  

ஏனைய வந்துழிக் காண்க.  

‘‘புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து
வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங்
கரிமான் பீடத் தரசுதொழ விருந்து
பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம்
புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந்
துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி
முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ
லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன்
பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின்
அறங்கெழு சேவடி காப்ப உறந்தையோ
டூழி யூழி வாழி
யாழி மாநில மாழியிற் புரந்தே’’
  

இது     கடவுளை  வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன்
ஒருவனையுங்    கூட்டி   வாழ்த்துதலின்   புரைதீர்காமம்   புல்லிய
வகையாயிற்று.                                          (26)
  

ஒன்றன்பகுதியுள் மக்கட்பகுதி தோன்றுமாறு
 

80.

வழங்கியன் மருங்கின் வகைபடநிலைஇப்
பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு
முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே.

 

இது  மேல் ‘ஒன்றன்பகுதி’  (தொல்.  புறத்திணை  26)  என்புழித்
தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுள் மக்கட் பகுதி கூறுகின்றது.

(இ-ள்.) பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் - ஒரு தலைவன்
தன்னைப்    பிறர்    வாழ்த்துதலும்   புகழ்ந்துரைத்தலுங்   கருதிய
பக்கத்தின்கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும் - அறம்
பொருளின்பங்களின்