கூறுபாடு தோன்ற
முன்னுள்ளோர் கூறிய
குறிப்புப் பொருளின்கண்ணும்; செந்துறை நிலைஇ - செவ்வனம் கூறுந் துறை நிலைபெற்று; வழங்குஇயல் மருங்கின். வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்று - அச்செந்துறைக் கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று எ-று. பரவல் முன்னிலைக்கட்
பெரும்பான்மை வரும். பரவலும் புகழ்ச்சியுந் தலைவன் கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப் புறனாயிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கையின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்றார்,
அறம்பொருள் இன்பம் பயப்பச் செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது,
விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும். ‘‘வண்ணமுந்
துணையும் பொரீஇ யெண்ணா’’ (பத்துப்.குறிஞ்சிப்.31) என்பவாகலானும், ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும், வண்ணமென்பது இயற்சொல்; வருண மென்பது வடமொழித் திரிபு. ‘ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்’றெனவே வருகின்ற காமப் பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்படுமாயிற்று; கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப் படுத்துக் கூறாதது, ‘அனைநிலை’ (தொல்.புறத்திணை20) வருணத்துப்படுத்துத் தோன்றக் கூறலின். உ-ம்: ‘‘நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி னளப்பரி யையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை யக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத்
|