நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3943
Zoom In NormalZoom Out


க் கொடிபோல- வோங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி’’
    (புற. வெ. பாடாண்.39)

இது கொடியடுத்தது.

‘‘வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே’’
     (புறம்.60)

இது குடையடுத்தது.

‘‘முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போல’’
       (பொருந.54.5)

இது முரசடுத்தது.

‘‘சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர் நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா
மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு’’

இது புரவியடுத்தது.

‘‘அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன
ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கிள்ளி களிறு’’
(முத்தொள். யானைமறம்.17)

இது களிறடுத்தது.

‘‘நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
மாக்கட னிவந்தெழுதருஞ்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ’’
             (புறம்.4)

இது தேரடுத்தது.

‘‘மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப’’ (புறம்.10)

இது தாரடுத்தது.

இவற்றுட் சிலவற்றை    வரைந்துகொண்டு   சின்னப்பூ   வென்று
பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க.                     (31)

புறத்திணைக்குரிய மெய்ப்பெயரினிடமாகவும்
அகத்திணை வருமாறு

87. மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.

இது   சுட்டி ஒருவர்   பெயர்கொள்ளும்   பாடாண்டிணைக்குரிய
மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது.

(இ-ள்)     மெய்ப்பெயர்    மருங்கின்   -   புறத்திணைக்குரிய
மெய்ப்பெயர்களின்   மருங்கே;   வழி   வைத்தனர்  -  புறத்திணை
தோன்றுதற்கு  வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர்
எ-று.

என்றது     எனக்கும்  அதுவே கருத்தென்பதாம். ‘வழி’யென்பது
ஆகுபெயர்.    மெய்ப்பெயராவன  புறத்திணைக்குரிய   பாட்டுடைத்
தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம்.

இதன் கருத்துச் ‘சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாஅர்’ (தொல்.
அகம்.54) என அகத்திணையியலுட் கூறினமையிற், கிளவித் தலைவன்
பெயரை     மெய்ப்பெயராகக்     கொள்ளாது,    ஏனைப்    புறத்
திணையாற்கொண்ட  மெய்ப்பெயரிடம்  பற்றி, அகத்திணைப் பொருள்
நிகழவும் பெறுமென்பதாம்.

உ-ம்:

‘‘அரிபெய்  சிலம்பின்’’   என்னும்   (6)  அகப்  பாட்டினுள்  (6)
தித்தனெனப்  பாட்டுடைத்தலைவன்  பெயரும்,  பிண்ட நெல்லினென
நாடும், உறந்தையெ