இச்சூத்திரம் மக்கட்கெய்திய
பொருண்மையை மீட்டுங்கூறி நியமித்ததாம்; ஆகவே, வெட்சி முதல் வஞ்சியிற் கொற்றவள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக் குரியராகி இடைபுகுந்த தேவர்க் காகாவென விதிவகையான் விலக்கியதாம். ஆகவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்பதூஉங் கூறினாராயிற்று. கொடிநிலை
முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க. உ-ம்: ‘‘மாவாடியபுலம் நாஞ்சிலாடா கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி நீ, யுடன்றோர் மன்னெயி றோட்டி வையா கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின் ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய வுருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே’’
(பதிற்றுப்.25) இது புலவன்
பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்றவள்ளை. ‘வல்லாராயினும் வல்லுந ராயினும்’ (57) ‘காலனுங் காலம்’ (41) என்னும் புறப்பாட்டுக்களும் அது. மக்கட் பாடாண்டிணைக்குரிய துறைகளாவன
|