நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3951
Zoom In NormalZoom Out


என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்.

உ-ம்:

‘‘வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு
மாற்றற்கு வந்தனேம் வாயிலோய் - வேற்றார்
திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயில்
இறைமகற்கெம் மாற்ற மிசை’’

என வரும்.

‘‘வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்
தாம், முன்னியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயி லோயே
கடுமான் றோன்றல் நெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறந்தலை யுலகமு மன்றே யதனாற்
காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே’’
     (புறம்.206)

இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது  வாயிலோனை  நோக்கிக்
கூறலின் பரிசில் கடாயதின்றாம்.

ஆண் அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்தலுமொன்று.

கண்படை     கண்ணிய கண்படைநிலையும். அரசரும் அரசரைப்
போல்வாரும்   அவைக்கண்   நெடிது   வைகியவழி   மருத்துவரும்
அமைச்சரும்  முதலியோர்  அவர்க்குக் கண்டுயில்கோடலைக் கருதிக்
கூறிய கண்படை நிலையும்;

‘கண்படை    கண்ணிய’  என்றார்,  கண்படை   முடிபொருளாக
இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு.

உ-ம்:

‘‘வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின்
னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர்
களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே
யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப
வறிது துயில் கோடல் வேண்டுநின்
பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே’’

என வரும்.

கபிலை கண்ணிய வேள்வி  நிலையும் - சேதாவினைக் கொடுக்கக்
கருதிய கொடைநிலை கூறுதலும்;

இது     வரையா   ஈகையன்றி   இன்னலுற்றாற்  கொடுக்கவென
உயர்ந்தோர்   கூறு   நாட்காலையிலே   கொடுப்பதாமாதலின் வேறு
கூறினார்.    ‘கண்ணிய’    என்றதனாற்    கன்னியர்  முதலோரைக்
கொடுத்தலுங் கொள்கை.

‘‘பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந்
தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் சென்னிதன்
மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த்
தானுலக மண்ணுலகா மன்று’’

வேலின்     ஓக்கிய  விளக்கு நிலையும் - வேலும் வேற்றலையும்
விலங்காதோங்கியவாறு    போலக்   கோலொடு   விளக்கும் ஒன்று
பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும்.

இன்: உவமப்பொருள். இது  கார்த்திகைத்  திங்களிற் கார்த்திகை
நாளின் ஏற்றிய விளக்குக் கீழும்மேலும் வலமுமிடமு