நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3959
Zoom In NormalZoom Out


பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி
கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’

இது சிறைவிடுதல் கூறிற்று.

‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்’’
            (முத்தொள்.39)

இது செருவொழிந்தது.

‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான்
வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு
காம நுகருமின் கண்படுமி னென்னுமே
யேம முரசின் குரல்’’

இதனுள்  இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர்
கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கல மென்றதனானே
பக்கநாளுந்  திங்கடோறும்  வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை
யுணர்க.

சிறந்த     சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய
மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்;

இதனைப்     பிறந்தநாளின்  பின்வைத்தார், பொன்முடி புனைந்த
ஞான்று   தொடங்கி  யாண்டுதோறும் இது  வருமென்றற்கு.  குறுநில
மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும்
கொள்க.

உ-ம்:

‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த
வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன்
மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே
லந்தரத்துக் கங்கை யனைத்து’’

என வரும்.

இதனானே   யாண்டு  இத்துணைச்    சென்றதென்று    எழுதும்
நாண்மங்கலமும் பெறுதும்.

நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும்  - உலக வொழுக்கத்தை
இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்;

இங்ஙனம்     புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை?
அந்நிழல்      உலகுடனிழற்றியதாகக்     கூறுதலும்பட்டுக்     குடி
புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன்
குறிக்கவும் படுதலின்.

மரபென்றதனாற் செங்கோலுந்    திகிரியும்    போல்வனவற்றைப்
புனைந்துரையாக்கலுங் கொள்க.

உ-ம்:

‘‘மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும்
முற்றுநீர் வைய