அடைத்திருத்தலும் அரசியலாயினும்,
அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவர வேண்டி யிருத்தலும், ஆற்றலின்றி ஆக்கங்கருதாது காத்தேயிருத்தலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு இனி
வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட
வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க. உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும் பற்றி.
இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத் திணைக்கும் புறனடையாதல்
வேண்டி. இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடைகடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக்கோடலும், பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண்
வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. முற்கூறியன வெல்லாம் ஓம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது. இரண்டாவது புறத்திணையியற்கு, மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகையுரை முடிந்தது.
|