நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4894
Zoom In NormalZoom Out


ரங்களுட்  சிறுபொழுது  வைப்பர்.  பின்பனியும் நண்பகலும் பிற்கூறிய
காரணம் அச்சூத்திரத்து கூறுதும்.

முல்லைக்குக்       காரும்      மாலையும்      உரியவாதற்குக்
காரணமென்னையெனின்,   பிரிந்து   மீளுந்   தலைவன்றிறமெல்லாம்
பிரிந்திருந்த   கிழத்தி  கூறுதலே  முல்லைப்  பொருளாயும்,  பிரிந்து
போகின்றான்    திறங்கூறுவனவெல்லாம்   பாலையாயும்   வருதலின்,
அம்முல்லைப்   பொருளாகிய   மீட்சிக்குந்   தலைவி   இருத்தற்கும்
உபகாரப்படுவது   கார்காலமாம்;   என்னை?   வினைவயிற்  பிரிந்து
மீள்வோன்,  விரைபரித்தேரூர்ந்து  பாசறையினின்று மாலைக் காலத்து
ஊர்வயின்   வரூஉங்  காலம்  ஆவணியும்  புரட்டாசியும்  ஆதலின்,
அவை   வெப்பமுந்   தட்பமும்   மிகாது  இடை  நிகரவாகி  ஏவல்
செய்துவரும்  இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும்,  ஆர்பதம்
மிக்கு   நீரும்   நிழலும்  பெறுதலிற்  களிசிறந்து,  மாவும்   புள்ளுந்
துணையோ    டின்புற்று    விளையாடுவன    கண்டு   தலைவற்குந்
தலைவிக்குங்  காமம்  குறிப்பு  மிகுதலானுமென்பது. புல்லை மேய்ந்து
கொல்லேற்றொடு  புனிற்றாக்  கன்றை  நினைந்து  மன்றிற் புகுதரவும்
தீங்குழ லிசைப்பவும் பந்தர்முல்லை வந்து மணங்கஞற்றவும் வருகின்ற
தலைவற்கும்   இருந்த   தலைவிக்குங்   காமக்குறிப்புச்  சிறத்தலின்,
அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று.

இனிக்     குறிஞ்சியாவது  புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப்
புணர்ச்சி  முதலியனவாம்.  இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு
நீட்டிப்பக் கருதுந் தலைவற்குக் களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி
அரியளாக  வேண்டுமாகவே  அவ்வருமையை  ஆக்குவது ஐப்பசியுங்
கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமு மென்பது. என்னை?
இருள்