க்கும் இயல்பென்பதுபடக் கூறிய இயன்மொழி வாழ்த்து.
‘‘முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு மரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் கொல்லி யாண்ட வல்வில் லோரியுங் காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரி யீகை மறப்போர் மலையனும் ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும் ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை யருந்திறற் கடவுள் காக்க முயர்சிமைப் பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி மோசி பாடிய ஆயு மார்வமுற் றுள்ளி வருந ருலைவுநனி தீரத் தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்கு எழுவர் மாய்ந்த பின்றை யழிவரப் பாடி வருநரும் பிறருங் கூடி யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண் உள்ளி வந்தனென் யானே விசும்புறக் கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி யாசினிக் கவினிய பலவி னார்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரு மதிரா யாணர் முதிரத்துக் கிழவ இவண்விளங்கு சிறப்பி னியல்தேர்க் குமண இசைமேந் தோன்றிய வண்மையொடு பகைமேம் படுகநீ யேந்திய வேலே’’
(புறம்.158)
இஃது இன்னோர் போல எமக்கு ஈ யென்ற இயன்மொழி வாழ்த்து.
‘‘இன்று செலினுந் தருமே சிறுவரை நின்று செலினுந் தருமே பின்னும் முன்னே தந்தனெ னென்னாது துன்னி வைகலுஞ் செலினும் பொய்யல னாகி யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன் தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற னினமலி கதச்சேக் களனொடு வேண்டினுங் களமலி நெல்லின் குப்பை வேண்டினும் அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே யன்ன னாகலி னெந்தை யுள்ளடி முள்ளு நோவ வுறாற்க தில்ல ஈவோ ரரியவிவ் வுலகத்து வாழ்வோர் வாழஅவன் றாள்வா ழியவே’’
(புறம்.171)
இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து.
‘‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட்
|