நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5105
Zoom In NormalZoom Out


டன்றவன் கைவண் மையே’’                (புறம்.134)

இது     பிறருஞ்   சான்றோர்   சென்ற   நெறி  யென்றமையின்
அயலோரையும்     அடுத்தூர்ந்தேத்தியது.     இன்னும்    வேறுபட
வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

சேய்வரல்    வருத்தம்   வீட   வாயில்   காவலற்கு   உரைத்த
கடைநிலையானும் - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்
தீர  வாயில்  காக்கின்றவனுக்கு  என்  வரவினை இசையெனக் கூறிக்
கடைக்கணின்ற கடைநிலையும்;

இது  வாயிலோனுக்குக்  கூறிற்றேனும்   அவ்வருத்தந்   தீர்க்கும்
பாடாண்தலைவனதே துறையென்பது பெற்றாம்.

இழிந்தோரெல்லாந்  தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல்
‘பரிசில்  கடைஇய  கடைக்கூட்டு  நிலையும்’ (தொல். பொரு. புறத்.36)
என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்.

உ-ம்:

‘‘வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு
மாற்றற்கு வந்தனேம் வாயிலோய் - வேற்றார்
திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயில்
இறைமகற்கெம் மாற்ற மிசை’’

என வரும்.

‘‘வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்
தாம், முன்னியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயி லோயே
கடுமான் றோன்றல் நெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறந்தலை யுலகமு மன்றே யதனாற்
காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே’’     (புறம்.206)

இது   தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை  நோக்கிக்
கூறலின் பரிசில் கடாயதின்றாம்.

ஆண் அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்தலுமொன்று.

கண்படை     கண்ணிய  கண்படைநிலையும். அரசரும் அரசரைப்
போல்வாரும்   அவைக்கண்   நெடிது   வைகியவழி   மருத்துவரும்
அமைச்சரும் முதலி