யாகித் தோன்றும் பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்;
தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாதற்கு ‘ஆவயின் வரூஉம்’ என்றார். இதற்கு ‘வழிபடு தெய்வம்’ என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க.
இதுவுந் தலைவன்
குறிப்பின்றித் தெய்வத்தான் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார் கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று.
உ-ம்:
‘‘கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி மால்காப்ப வெண்ணிருதோ ளேந்திழையா டான்காப்பப் -
பண்ணியனூற் சென்னியர்க் களிக்குந் தெய்வநீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே’’
(பெரும்பொருள் விளக்கம் கடவுள்
வாழ்த்து.புறத்திரட்டு.1501)
என வரும்.
கைக்கிளை
வகையோடு உளப்படத் தொகைஇ - மேற் காமப்பகுதி யென்ற கைக்கிளை யல்லாத கைக்கிளையின் பகுதி யோடே வாயுறை வாழ்த்துஞ் செவியறிவுறூஉம் புறநிலைவாழ்த்துங் கூடி நான்காகிய தொகைபெற்ற நான்கும்;
வாயுறை வாழ்த்து
முதலிய மூன்றுந் தத்தம் இலக்கணத்திற்
றிரிவுபடா; இக்கைக்கிளை திரிவுபடுமென்றற்கு எண்ணும்மையான் உடனோதாது
உளப்படவென
வேறுபடுத்தோதினார். அகத்திணையியலுள்
இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், ‘காமஞ்சாலா இளமை யோள்வயிற்’
(தொல். பொ. அகத். 50) கைக்கிளையும், ‘முன்னைய நான்கும்’
(தொல். பொ. அகத்.52) என்ற கைக்கிளையும், ‘காமப்பகுதி’என்ற கைக்கிளையும், களவியலுண்
‘முன்னைய மூன்றும்’ (தொல். பொ.கள.28) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோ ராயினும் பிறராயினுங் கூறுதற்கு
உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் கடைநிலைக்காலத்து ஒருவன் ஒருத்
|