துணை யாயினு மீத்த னன்றென மறுமைநோக் கின்றோ வன்றே பிறர், வறுமைநோக் கின்றவன் கைவண் மையே’’
(புறம்.141)
‘‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’’
(பத்துப்.சிறுபாண்.1)
இவை பாணாற்றுப்படை.
‘‘சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன் வள்ளிய னாதல் வையகம் புகழினும் உள்ள மோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை யொருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் ‘பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே னாக அகமலி யுவகையோ டணுகல் வேண்டிக் கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்டு இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந் துன்னரும் பரிசில் தருமென என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே’’
(புறம்.394)
‘‘அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாள்’’
(பத்துப். பொருந. 1, 2)
இவை பொருநராற்றுப்படை.
‘‘சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினு மருவி கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும் நீரினு மினிய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே’’
(புறம்.105)
‘‘மெல்லியல் விறலிநீ நல்லிசை....காணியசென்மே’’
(புறம்.133)
இவை விறலியாற்றுப்படை.
கூத்தராற்றுப்படை தடுமாறு
தொழிலாகாமற் கூத்தரை ஆற்றுப் படுத்ததென விரிக்க. ஏனையவும் அன்ன.
முருகாற்றுப்படை
|