நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5122
Zoom In NormalZoom Out


ழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநருஞ்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரு
மரைக்கமை மரபின மிடற்றியாக் குநரு
மிடற்றமை மரபின வரைக்கியாக் குநருங்
கடுந்தே ரிராம னுடன் புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
யிருங்கிளைத் தலைமை யெய்தி
யரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே’’      (புறம்.378)

இது   தானே  போவென  விடுத்தபின் அவன் கொடுத்த வளனை
உயர்த்துக் கூறியது.

‘‘உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே
யகறி ரோவெம் மாயம் விட்டெனச்
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையிற் றரத்தர யானும்
மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்
டின்மைதீர வந்தனென்’’      (பத்துப். பொருந. 119-29)

இது  யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த
வளனை  உயர்த்துக்  கூறியது.  ‘நடைவயின்  தோன்று’ மென்றதனாற்
சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க.
அவை  பரிசில்  சிறிதென்று  போகலும்,  பிறர்பாற்  சென்று  பரிசில்
பெற்றுவந்து  காட்டிப்  போகலும்,  இடைநிலத்துப்  பெற்ற  பரிசிலை
இடைநிலத்துக்   கண்டார்க்குக்  கூறுவனவும்,  மனைவிக்கு  மகிழ்ந்து
கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.

உ-ம்: