டத் தாரிரு ளரையிரவின் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனி யுயரழுவத்துத் தலைநாண்மீ னிலைதிரிய நிலைநாண்மீ னதனெ திரேர்தரத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாசிச் செல்லா தூசி முன்னா தளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி யொருமீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே யதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன் நோயில னாயி னன்றுமற் றில்லென வழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப வஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே மைந்துடை யானை கைவைத் துறங்கவுந் திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவுங் காவல் வெண்குடை கால்பரிந் துலறவுங் காலியற் கலிமாக் கதியின்றி வைகவு மேலோ ருலக மெய்தின னாகலி னொண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க் களந்து கொடையறியா வீகை மணிவரை யன்ன மாஅயோனே’’
(புறம்.229)
இப்புறப்பாட்டும் அது.
இதனுட் பாடாண்டலைவனது
நாண்மீனை வீழ்மீன் நலிந்தமை பற்றிக் கூறியது.
‘‘இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறி துநிலைஇய காயமு, மென்றாங் கவையளந் தறியினு மளத்தற் கரியை யறிவு மீரமும் பெருங்கண் ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயோடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே யம்புதுஞ்சுங் கடியரணா லறந்துங்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை யனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே’’
(புறம்.20)
இப் புறப்பாட்டும் அது.
புதுப்புள் வந்ததும்
பழம்புட் போயதுங் கண்ட தீங்கின் பயன் நின்மேல் வாராமல் ‘விதுப்புறவறியா ஏமக் காப்பினையாக’ என்று ஓம்படை கூறியது. அது மேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்ததனான் உணர்க.
‘‘மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும், என்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலு மளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பா அல்புளிப்பினும் பகலிருளினும் நா அல்வேத நெறிதிரியினுந் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யந்தீ யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே’’
(புறம்.2)
என்னும் புறப்பாடுப் பகைநிலத்தரசற்குப் பயந்
|