நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5126
Zoom In NormalZoom Out


தவாறு     கூறிப்  பினனர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி
நிற்பாயென    அச்சந்தோன்றக்    கூறி   ஓம்படுத்தலின்   ஓம்படை
வாழ்த்தாயிற்று ‘‘காலனுங் காலம்’’ என்னும் (41) புறப்பாட்டும் அது.

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய
வருமே  -  உலகத்துத்  தோன்றும் வழக்கினது கருத்தினானே மூன்று
காலத்தொடும்  பொருந்தக்  கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற
பாடாண்டிணை எ-று
.

என்றது, இவ்வழக்கியல்   காலவேற்றுமை  பற்றி  வேறுபடுமாயின்,
அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுண்ர்த்தியவாறு.

அவை, பகைவர்நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும்
அகற்றிப்  பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது
பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த
இடையாய  அறம்;  அதுவன்றிப்  பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல்
நிகழினும், அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப்
பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும்,
பொருள்  வருவாய்  பற்றிச் சேறலும், வஞ்சித்துச் சேறலும் போல்வன
ஒன்றனின்   ஒன்றிழிந்த  ஞாலத்து  நடக்கைக்  குறிப்பு.  மாற்றரசன்
முற்றியவழி   ஆற்றாதோன்   அடைத்திருத்தலும்   அரசியலாயினும்,
அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவர வேண்டி
யிருத்தலும்,    ஆற்றலின்றி    ஆக்கங்கருதாது   காத்தேயிருத்தலும்
ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு.

இனி  வாகைக்குப்   பார்ப்பன  ஒழுக்க  முதலியன  நான்கற்கும்
வேறுபட  வருதலுங் கொள்க.  காஞ்சிக்கும்  அவரவர் அறிவிற்கேற்ற
நிலையாமை  கொள்க.  உயிரும்  உடம்பும் பொருளுமென்ற மூன்றும்
பற்றி. இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத் திணைக்கும்