இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர்இயல்பே.
இவ் வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற்
களவியலென்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்
தென்று இரு முதுகுரவரான் கொடையெதிர்ந்த தலைவியை அவர்
கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்த உள்ளத்தோடு
எதிர்ப்பட்டுப்
புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை
மறையிற்கொள்ளுங்
களவன்றாயிற்று. இது வேதத்தை ‘மறைநூல்’ என்றாற்போலக் கொள்க.
“களவெனப் படுவது யாதென வினவின்
வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல்
முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு
தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன்
விளையாட் டிடமென வேறுமலைச் சாரல்
மானினங் குருவியொடு கடிந்து விளையாடும்
ஆயமுந்
|