நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5242
Zoom In NormalZoom Out


 

தோழியும் மருவிநன் கறியா
மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்.”

இக்களவைக்  ‘காமப்புணர்ச்சியும்’    (தொல்.  பொ.498)  என்னுஞ்
செய்யுளியற்  சூத்திரத்திற்  கூறிய  நான்கு  வகையானும் மேற்கூறுமாறு
உணர்க.

இன்பத்திற்குப்     பொதுவிலக்கணம்  அகத்திணை  யியலுட்  கூறி
அதற்கினமாகிய  பொருளும்    அறங்     கூறும்    புறத்திணையை,
அதன்புறத்துநிகழ்தலிற்,       புறத்திணையியலுட்     கூறி    யீண்டு
அவ்வின்பத்தினை   விரித்துச்  சிறப்பிலக்கணங்   கூறுதலின்,   இஃது
அகத்திணையியலோடு இயை புடைத்தாயிற்று. ‘வழக்கு... நாடி’ என்றலின்
இஃது உலகியலெனப்படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு
முன்னர்   ஒருவற்கும்   ஒருத்திக்குங்   கண்ணும்   மனமுந்  தம்முள்
இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின்.

இச்சூத்திரங்     களவெனப்பட்ட  ஒழுக்கம்  உலகத்துப்  பொருள்
பலவற்றுள்ளும் இன்பம்பற்றித்  தோன்றுமெனவும்   அஃது   இன்னதா
மெனவுங் கூறுகின்றது.

இதன் பொருள்:   இன்பமும்   பொருளும் அறனும் என்றாங்கு -
இன்பமும்    பொருளும்    அறனுமென்று    முற்கூறிய    மூவகைப்
பொருள்களுள்;    அன்பொடு   புணர்ந்த   ஐந்திணை   மருங்கின் -
ஒருவனோடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்பொடு கூடிய  இன்பத்தின்
பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள்; காமக்  கூட்டங்
காணுங்காலை   -    புணர்தலும்,    புணர்தனிமித்தமு   மெனப்பட்ட
காமப்புணர்ச்சியை   ஆராயுங்  காலத்து;  மறைஓர்  தேஎத்து  மன்றல்
எட்டனுள்-வேதம்  ஓரிடத்துக்  கூறிய  மண மட்டனுள்; துறை  அமை
நல்யாழ்த்    துணைமையோர்   இயல்பு  -  துறை   அமைந்த   நல்
யாழினையுடைய பிரிவின்மையோரது தன்மை என்றவாறு.

அன்பாவது,

“அடுமரந் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த
படுமணிப் பைம்பூ ணவருந் - தடுமாறிக்
கண்ணெதிர்நோக் கொத்தவண் காரிகையிற் கைகலந்து
உண்ணெகிழச் சேர்வதா