நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5244
Zoom In NormalZoom Out


 

கழல் முன்நிறீஇக் - கேள்வியாற்
கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே
தெய்வ மணத்தார் திறம்.”

ஆசுரமாவது: கொல்லேறு கோடல், திரிபன்றியெய்தல், வில்லேறுதல்
முதலியன செய்து கோடல்.

“முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்
தகைநலங் கருதுந் தருக்கினி ருளரெனின்
இவையிவை செய்தாற் கெளியள்மற் றிவளெனத்
தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித்து
அன்னவை யாற்றிய அளவையின் தயங்கல்
தொல்நிலை அசுரந் துணிந்த வாறே.”

இராக்கதமாவது: தலைமகள் தன்னினுந் தமரினும்  பெறாது  வலிதிற்
கொள்வது.

“மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர்
வலிதிற்கொண்டாள்வதே என்ப - வலிதிற்
பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோள்
இராக்கதத்தார் மன்ற லியல்பு.”

பைசாசமாவது: மூத்தோர் களித்தோர்  துயின்றோர்   புணர்ச்சியும்,
இழிந்தோளை மணஞ்செய்தலும், ஆடை மாறுதலும், பிறவுமாம்.

“எச்சார்க் கெளியர் இயைந்த காதலர்
பொச்சாப் பெய்திய பொழுதுகொள் அமையத்து
மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பின்
உசாவார்க் குதவாக் கேண்மை
பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே.”

“இடைமயக்கஞ் செய்யா இயல்பினில் நீங்கி
உடைமயக்கி உட்கறுத்தல் என்ப - உடையது
உசாவார்க் குதவாத ஊனிலா யாக்கைப்
பிசாசத்தார் கண்டமணப் பேறு.”

இனிக்  கந்தருவமாவது:   கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள்
எதிர்ப்பட்டுக்  கண்டு   இயைந்தது   போலத் தலைவனுந் தலைவியும்
எதிர்ப்பட்டுப் புணர்வது.

“அதிர்ப்பில்பைம் பூணாரும் ஆடவரும் தம்முள்
எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப-கதிர்ப்பொன்யாழ்
முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்