சிக்
கந்திருவர் கண்ட கலப்பு.”
என இவற்றானுணர்க.
களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர்
முதலியோர்க்கும் (21) உரித்து, மாலைசூட்டுதலும் இதன் பாற்படும்.
வில்லேற்றுதல் முதலியன பெரும்பான்மை அரசர்க்
குரித்து. அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே
சிறந்தது. இராக்கதம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து;
வலிதிற் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய்
இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடை
மையிற் சேட்படை முதலியன உளவா மென்றுணர்க.
அறத்தினாற்
பொருளாக்கி அப்பொருளான் இன்பநுகர்தற்
சிறப்பானும் அதனான் இல்லறங்
கூறலானும் இன்பம் முற்கூறினார்.
அறனும் இன்பமும் பொருளாற்
பெறப்படுதலின் அதனை
இடைவைத்தார். போகமும் வீடுமென இரண்டுஞ் சிறத்தலிற் போகம்
ஈண்டுக் கூறி வீடு பெறுதற்குக் காரணம் முற்கூறினார்.
ஒழிந்த மணங்
கைக்கிளையுங் பெருந்திணையுமாய் அடங்குதலின்
இதனை ‘அன்பொடு’
என்றார். இயைதலின் கந்தருவப் பாற்படும்.
ஐந்திணைப் புறத்தவாகிய
வெட்சி முதலியவற்றிற்கும் அன்பொடு புணர்தலுங் கொள்ளப்படும்.
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதேதுணை”
(குறள். 76)
என்றலின்.
கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக்
களவே அமையாதென்றற்குத் “துறையமை” என்றார்.
(1)
காமக் கூட்டத்திற்குரியாரியல்பும் அவரெதிர்ப்பாட்டிற்குரிய
காரணமும் இவையெனல்
92. ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே.
இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும்
எதிர்ப்படும் நிலனும் அவ்வெ
|