நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5254
Zoom In NormalZoom Out


 

லைவனைப்போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த
வழியெல்லாங் கந்தருவமென்பது    வேத   முடிபாதலின்   இவ்வுள்ளப்
புணர்ச்சியுங் கந்தருவமாம் ஆதலான்  அதற்கு  ஏதுவாகிய ‘பெருமையும்
உரனும்’ ‘அச்சமும் நாணும்’ போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும்
நாடக வழக்கன்றிப்   பெரும்பான்மை   உலகியல்   வழக்கே  கூறலின்,
இக்கந்தருவம்      இக்களவியற்குச்      சிறப்பன்று,    இனிக்கூறுவன
மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்கமாதலின். (8)

களவிற்குரிய பொதுவிலக்கணம் இவையெனல்

99. வேட்கை யொருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றச்
சிறப்புடை மரபினவை களவென மொழிப

இது     முதலாகக்  களவிலக்கணங் கூறுவார். இதனான் இயற்கைப்
புணர்ச்சிமுதற்   களவு   வெளிப்படுந்துணையும் இருவர்க்கும் உளவாம்
இலக்கணம் இவ்வொன்பது மெனப் பொதுவிலக்கணங் கூறுகின்றார்.

(இ-ள்.)  ஒருதலைவேட்கை - புணராதமுன்னும்  புணர்ந்த பின்னும்
இருவர்க்கும்   இடைவிட்டு நிகழாது   ஒரு தன்மைத்தாகி நிலைபெறும்
வேட்கை;   ஒருதலை உள்ளுதல்  -  இடைவிடாது ஒருவர் ஒருவரைச்
சிந்தியாநிற்றல்;  மெலிதல்-அங்ஙனம்  உள்ளுதல் காரணத்தான் உடம்பு
வாடுதல்;  ஆக்கஞ்  செப்பல்  -  யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி
அதனை ஆக்கமாக நெஞ்சிற்குக்  கூறிக்  கோடல்;  நாணுவரையிறத்தல்
-  ஆற்றுந்  துணையும்   நாணி   அல்லாதவழி  அதன்வரையிறத்தல்;
நோக்குவ   எல்லாம்  அவையே  போறல் -  பிறர்  தம்மை நோக்கிய
நோக்கெல்லாந்   தம்  மனத்துக்  கரந்து  ஒழுகுகின்றவற்றை  அறிந்து
நோக்குகின்றாரெனத்   திரியக்கோடல்;   மறத்தல்   -   விளையாட்டு
முதலியவற்றை மறத்தல்; மயக்கம் -  செய்திறன்  அறியாது  கையற்றுப்
புள்ளும்  மாவும்  முதலியவற்றொடு  கூறல்;  என்று அச்சிறப்பு  உடை
மரபினவை  களவு  என  மொழிப  -  என்று  சொல்லப்பட்ட அந்தச்
சிறப்புடைத்தான  முறையினையுடைய  ஒன்பதுங்  களவொழுக்கமென்று
கூறுப எ-று.

இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைமை