யின் வேட்கை முற்கூறினார்.
சேட்படுத்தவழித் தலைவன் அதனை
அன்பென்று கோடலும்,
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித்
தலைவி அதனை
அன்பென்று கோடலும் போல்வன ஆக்கஞ்செப்பல்.
தலைவன்
பாங்கற்குந் தோழிக்கும் உரத்தலுந், தலைவி தோழிக்கு அறத்தொடு
நிற்றலும் போல்வன நாணுவரையிறத்தல்.
களவதிகாரமாதலின்
அவையென்னுஞ் சுட்டுக் களவை
உணர்த்தும். கையுறைபுனைதலும்
வேட்டைமேலிட்டுக் காட்டுள்திரிதலுந்
தலைவற்கு மறத்தல்; கிளியும்
பந்தும் முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது
தலைவிக்கு
மறத்தல். சாக்காடாவன:
“அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரெங் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.”
(குறுந்.49)
“நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம்
நயனின் மாக்கள் போல வண்டினஞ்
சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
மையன் மானினம் மருளப் பையென
வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
ஐயறி வகற்றுங் கையறு படரோடு
அகலிரு வானம் அம்மஞ் சீனப்
பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக
ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக்
கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது
எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து
உள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து
இதுகொல் வாழி தோழி யென்னுயிர்
விலங்குவெங் கடுவளி யெடுப்பத்
துலங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே.”
(அகம்.71)
இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவலெனக்
கூறுதல்
மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடையவெனவே களவு
சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா.
|