நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5338
Zoom In NormalZoom Out


 

  கடாவுதற் பொருட்டாய் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க.

“கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையோ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியா துண்ட கடுவ னயலது
கறிவளர் சாந்த மேறல் செல்லாது
நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்
குறியா வின்ப மெளிதி னின்மலைப்
பல்வேறு விலங்கு மெய்து நாட
குறித்த வின்ப நினக்கெவ னரிய
வெறுத்த வேஎர் வேய்மருள் பணைத்தோ
ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளு மினைய ளாயிற் றந்தை
யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக்
கங்குல் வருதலு முரியை பைம்புதல்
வேங்கையு மொள்ளிணர் விரிந்தன
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே.”        (அகம்.2)

‘விலங்கும் எய்து  நாட’  வென்று  அந்நாட்டினை  இறப்பக்  கூறி
இந்நாடுடைமையிற் ‘குறித்த இன்பம் நினக்கெவ னரிய’  வென வரைதல்
வேண்டியவாறும்,   வேங்கை    விரிந்ததனான்     தினையறுத்தலின்
இற்செறிப்புக் கூறியவாறுங், ‘கங்குல் வருதலும் உரியை’ யெனப் பகற்குறி
மறுத்து    இரவுக்குறி   நேர்வாள்போற்    கூறி  ‘நெடுவெண்டிங்களு
மூர்கொண்டன்றே’  யென்று    அதனையும்    மறுத்து    வரைதற்கு
நல்லநாளெனக்   கூறி வரைவுகடாயவாறுங் காண்க.

“காமங் கடவ வுள்ள மினைப்ப
யாம்வந்து காண்பதோர் பருவ மாயின்
ஓங்கித் தோன்று முயர்வரைக்கு
யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.”     (ஐங்குறு.237)

இஃது ஊரை இறப்பக் கூறியது.

“துணை புணர்ந் தெழுதரும்” என்னும் நெய்தற்கலியுட்,

“கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத்
தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயான் மற்றுநின்
குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ;

ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை
நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்றுநின்
வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமா