நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5339
Zoom In NormalZoom Out


 

ய்க் கிடவாதோ;

திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை
யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின்
புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ” (கலி.135)

என  இவை ஒழுக்கமும் வாய்மையும்  புகழும்  இறப்பக்  கூறியன.
குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிறப்பக்   கூறல்  வேண்டும்.  ஏனைய
வந்துழிக் காண்க.

இன்னும்     ‘அனைநிலைவகை’ என்றதனாலே தலைவி யாற்றாமை
கண்டு     வரைவுகடாவவோவென்று    தலைவியைக்    கேட்டலுஞ்
சிறைப்புறமாகவுஞ்   சிறைப்புறமன்றாகவுந்  தலைவி  யாற்றாமை  கூறி
வரைவுகடாவுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க.

“கழிபெருங் கிழமை கூறித் தோழி
யொழியா யாயினொன் றுரைக்கோ தெய்ய”

“கடவுணெற்றிய கருங்கால் வேங்கை
தடவுநிலைப் பலவொடு தாழ்ந்த பாக்கத்துப்
பின்னீ ரோதி யிவடமர்க் குரைப்பதோர்
பெண்யாப் பாயினு மாக வொண்ணுதல்
இலங்குவளை மென்றோட் கிழமை
விலங்குமலை நாடநீ வேண்டுதி யெனினே.”

“நிலவு மிருளும் போல நெடுங்கடற்
கழியுங் கானலு மணந்தன்று
நுதலுந் தோளும் அணிந்தன்றாற் பசப்பே.”

எனவரும்.

ஐயச்   செய்கை   தாய்க்கு   எதிர்மறுத்துப்   பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்  - தலைவிக்குக் கூட்டம் உண்டு கொலென்று
தாய் ஐயுற்றவழி அவ்வையப்பட்ட செய்கையைத்  தாய்க்கு எதிரேநின்று
மறுத்து அதனைப்  பொய்யெனவே கருதும்படி அவள் மனத்தினின்றும்
போக்கிப்    பொய்யல்லன   சில   சொற்களை    மெய்வழிப்படுத்து
அறிவுகொள்ளக் கொடுப்பினும்:

உ-ம்:

“உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயலான் றவிந்த தூங்கிருள் நடுநாள்
மின்னுநிமிர்ந் தன்ன கனங்குழை யிமைப்பப்
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்
வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி
மிடையூர் பிழியக் கன்டனென் இவளென
அலையல் வாழிவேண் டன்னைநம் படப்பைச்