சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான்
சுடரின்றி தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மரா அத்த கூகை குழறினும்
நெஞ்சழிந் தரணஞ் சேரும் அதன்றலைப்
புலிக்கணத் தன்ன நாய்த்தொடர் விட்டும்
முருக னன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லா னாக
அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே.” (அகம்.158)
இது மிடையை ஏறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவுமருட்டலும்
உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி
அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது.
இது சிறப்புறமாகக் கூறி வரைவு கடாதலின் அதன் பின் வைத்தார்.
“வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும்
பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச்
சேந்தனவாஞ் சேயரிக்கண் தாம்.”
(ஐந்திணை.ஐம்.15)
இதுவும் அது.
அவன் விலங்குறினும் - தன்னானுந் தலைவியானும் இடையீடு படுதலன்றித் தலைவனாற் கூட்டத்திற்கு
இடையூறு தோன்றினும்; அது வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற்குற்வழியும், காவற்பிரிவுமாம்.
உ-ம்:
“செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற வினி.”
(கலி.19)
“நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக்
கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி
வண்ணந்தா வென்கந் தொடுத்து.”
(ஐந்.எழு.16)
களம்பெறக் காட்டினும் - காப்பு மிகுதியானங் காதன் மிகுதியானுந்
தமர் வரைவு மறுத்ததனானுந் தலைவி
ஆற்றாளாயவழி இஃதெற்றினா
னாயிற்றெனச் செவிலி அறிவரைக்
கூஉய் அவர் களத்தைப்
பெறாநிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும்.
களமாவது கட்டுங் கழங்
|