நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5346
Zoom In NormalZoom Out


 

க் கடுவனொடு நல்வரை யேறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன்
திரையணற் கொடுங்கவு ணிறைய முக்கி
வான்பெய னனைந்த புறத்த நோன்பியர்
தையூ ணிருக்கையிற் றோன்று நாடன்
வந்தனன் வாழி தோழி யுலகங்
கயங்க ணற்ற பைதரு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.”       (நற்.22)

இதனுள்,  தினைவிளைகாலம்  வதுவைக்  காலமாயினும் வம்ப மாரி
இடையிடுதலான அன்று யான்கூறிய வரைவு பொய்த்தனரேனும்  இன்று
மெய்யாகவே வந்தனரென்றாள்.

“உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல்
அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை
பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும்
பல்பூங் கானற் பகற்குறி வந்துநம்
மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினுங்
குன்றிற் றோன்றுங் குவவுமண லேறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
தண்டா ரகலம் வண்டிமிர் பூதப்
படுமணிக் கலிமா கடைஇ
நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே.”            (நற்.235)

இது,  தலைவன்   வரைவொடு  வருகின்றமை  காண்கம்  வம்மோ
வென்றது.

பாங்குற   வந்த   நாலெட்டும்  -  பாங்கியர்   பலருள்ளும் பாங்
காந்தன்மை  சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும்; நாலெட்டுமென உம்மை
விரிக்க;   வகையும்  -  இக்கூற்றுக்களிலே   வேறுபட   வருவனவும்;
தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன - பொறுத்தற்கரிய சிறப்பினையுடைய
தோழியிடத்தன எ-று.

எனவே,  ஒன்றிய  தோழிக்கன்றி  ஏனையோர்க்கு  இக்கூற்று  இன்
றென்றான்.  தாய்த்தாய்க்  கொண்டுவருஞ்  சிறப்பும், இருவர் துன்பமுந்
தான் உற்றாளாகக்  கருதுஞ் சிறப்பும் உடைமையின் ‘தாங்கருஞ் சிறப்பு’
என்றான். உரைத்துழிக் கூட்டத்தோடே அகற்சியும் என்றலும் ஊட்டலும்
உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இருநான்