ம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகங் கொள்வோ ரின்மையிற்
றொடலைக் குற்ற சிலபூ வினரே.”
(ஐங்குறு.187)
இது கையுறை மறுத்தது.
“அம்ம வாழி தோழி நம்மலை
வரையா மிழியக் கோட னீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந்
தண்பனி வடந்தை யச்சிரம்
முந்துவந் தனர்நங் காத லோரே.”
(ஐங்குறு.223)
இது, வரைவிடைப்
பிரிந்தோன் குறித்த
பருவத்திற்குமுன்
வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. (23)
செவிலி கூற்று நிகழுமாறு கூறல்
115. களவல ராயினுங் காமமெய் படுப்பினும்
அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங்
கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்
ஆடிய சென்றுழி யழிவுதலை வரினுங்
காதல் கைமிகக் கனவி னரற்றலுந்
தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும்
போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவின் எச்சத்தும் மகணெஞ்சு வலிப்பினும்
இருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணும்
இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியோடு
அன்னவை பிறவுஞ் செவிலி மேன.
இது, செவிலிகூற்று நிகழுமாறு கூறுகின்றது.
அக்கூற்றுச் செவிலி
தானே கூறப்படுவனவுந், தலைவியுந் தோழியுங்
கொண்டு கூற்றாகக்
கூறப்படுவனவுமென இருவகையவாம்; இக்கூறப்பட்ட
பதின்மூன்று
கிளவியும் அவைபோல்வன
பிறவுஞ் செவிலி தானே
கூறப்படுவனவுந் தலைவியுந் தோழியும்
அவள் கூற்றாய்க்
கொண்டெடுத்து
மொழியப் படுவனவுமாய்ச்
செவிலிக்
குரியவாமென்றவாறு. ‘இன்னவகை’ யென்றார், தன்
கூற்றுங் கொண்டு
கூற்றுமாய் நிகழுமென்றற்கு.
(இ-ள்.)
களவு அல
|