ாழற் கருங்கோட் டஞ்சினைத்
தனிப்பார்ப் புள்ளிய தண்பறை நாரை
மணிப்பூ நெய்தன் மாக்கழி நிவப்ப
இனிப்புலம் பின்றே கானலு நளிகடற்
றிரைச்சுர முழந்த திண்டிமில் விளக்கிற்
பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய
எந்தையுஞ் செல்லுமா ரிரவே அந்தில்
அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி
யாயு மாயமோ டயரு நீயுந்
தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக்
கோங்கு முகைத்தன்ன குவிமுலை யாகத்
தின்றுயி லமர்ந்தனை யாயின் வண்டுபட
விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப்
பூவேய் புன்னையந் தண்பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே.” (அகம்.240)
எனத் தோழி களஞ்சுட்டியவாறும் காண்க. (30)
துணையின்று கழியுநா ளித்துணையவெனல்
122. முந்நா ளல்லது துணையின்று கழியாது
அந்நா ளகத்தும் அதுவரை வின்றே.
இதுவும் அதிகாரங்கள் தலைவிக் கெய்தியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
முந்நாள் அல்லது துணையின்று கழியாது - பூப்பெய்திய மூன்றுநாளும் அல்லது கூட்டமின்றி
இக்கள வொழுக்கங் கழியாது; அந்நாளகத்தும் அது வரைவு இன்றே - அம்மூன்றுநாளின் அகப்பட்ட நாளாகிய ஒருநாளினும் இரண்டு
நாளினுந் துணையின்றிக் கழிதல் நீக்கப்படாது எ-று.
‘அது’ என்றது துணையின்று கழிதலை. பூப்பினான் துணையின்றிக் கழிதல் பொருந்திற்றாயினும், பூப்பின்றி ஒருநாளும் இரண்டு நாளுந் துணையின்றிக் கழிதல் வழுவாமெனக் கருதின் அதுவும் புறத்தார்க்குப் புலனாம் என்று அஞ்சுதலாற் கழிதலின் வழுவாகா வென்றற்கு ‘வரை வின்று’ என்றார்.
இன்னோரன்ன காரணந் தலைவற் கின்மையின் அவனான் துணையின்றிக் கழிதல் இன்றாயிற்று.
உ-ம்:
“குக்கூ வென்றது கோழி அதனெதிர்
துட்கென் றற்றென்றூஉ நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.” (குறுந்.157)
இது முந்நாளைப் பிரிவாகிய பூப்பிடைப்பிரிவு வந்துழித் த
|