லைவி கூறியது.
இனி அல்லகுறிப்பட்டுழி ஒருநாளும் இரண்டுநாளும் இடை யீடாமென்றுணர்க. பூப்புநிகழாத காலத்துக் களவொழுக்கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்டதென்று உரைப்பாரும் உளர்; இவ்விதி அந்தணர்க்குக் கூறியதன்று; அரசர் வணிகராதியவர்க்குச் சிறுபான்மையாகவும், ஏனை
வேளாளர் ஆயர் வேட்டுவர் முதலியோர்க்குப் பெரும்பான்மையாகவுங் கூறிய விதியென்றுணர்க. என்னை? பூப்பு நிகழுங் காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்தினார்க்கு,
‘அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட வொழுகலும்’ (தொல்.கற்பியல்.5)
என்பதனாற் பிராயச்சித்தம் விதிப்பாராதலின்.
இதனானே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்கால் அறத்தொடு நின்றும் வரைதல் பெறுதும். (31)
தலைவி அறத்தொடு நிற்றல்
123. பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம்
நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலில்
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்
துணையோர் கரும மாக லான.
இது, தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
தன்வயின் வரூஉம் நன்னய மருங்கின் - தலைவியிடத்தே தோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக் கண்ணே: பல்நூறு வகையினும் நாட்டம் வேண்டலில் - பல நூறாகிய பகுதியானும் ஆக்கமுங் கேடும் ஆராய்தலை அவர் விரும்புதலாலே: துணைச்சுட்டுக் கிளவி கிழவியாகும் - இவள் ஒரு துணையுடையளென அவர் சுட்டுதலிடத்துக் கிளக்குங்கிளவி தலைவியதாம்; துணையோர் கருமம் ஆகலான - அக்கிளவி அத்தோழியானுஞ் செவிலியானும் முடியுங்காரியம் ஆகலான் எ-று.
என்றது, தோழி ‘பலவேறு கவர்பொருணாட்டம்’ (114) உற்றவழியுஞ் செவிலி களவு அலராதல் முதலியவற்றான் (115) நாட்டமுற்ற வழியுந் தலைவி அறத்தொடு நிற்குமென்று அறத்தொடு நிலைக்கு இலக்கணங் கூறியவாறாயிற்று. தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்ப, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்குமென்று உணர்க. இதனானே பாங்கற்கு உற்றதுரைத்த பின்னர்த் தலைவன் உரையாமையும் பெற்றாம். “புனையிழை
நோக்கியும்” (கலி.76) என்னும் மருதக்கலியுள், “வினவுதியாயின்” என நாட்டம் நிகழ்
|