நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5363
Zoom In NormalZoom Out


 

யிழையாய் நின்னிற்
செறிவறா செய்த குறி.”                 (திணை.ஐம்.43)

இஃது அவன்மேற் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறியது.

“இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன்
கடுமான் மணியரவ மென்று - கொடுங்குழை
புள்ளரவுங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்
உள்ளரவ நாணுவ ரென்று.”              (ஐந்.எழு.159)

இஃது இவன் இனி ஆண்டுவரிற் சுற்றத்தார் அறிவரென்றது.

“வீழ்பெயற் கங்குனின் விளியோர்த்த வொடுக்கத்தால்
வாழுநாள் சிறந்தவள் வருந்துதோட் டவறுண்டோ
தாழ்செறி கடுங்காப்பிற் றாய்முன்னர் நின்சாரல்
ஊழுறு கோடல்போ லொளிவளை யுகுபவால்.” (கலி.48)

இது தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது.

“அன்னை வாழியோ வன்னைநம் படப்பை
பொம்ம லோதி யம்மென் சாயல்
மின்னென நுடங்கிடைக் கின்னிழ லாகிய
புன்னை மென்காய் போகுசினை யிரிய
ஆடுவளி தூக்கிய வசைவிற் கொல்லோ
தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென
எண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே.”

இது தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது.

“மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போல்
திணிமண லெக்கர்மே லோதம் பெயர்த்
துணிமுந்நீர் துஞ்சா தது.”                 (ஐந்.எழு.60)

இது தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது.

திங்கள் மேல் வைத்துக்  கூறுவனவும்  ஓதத்தின்  மேல்  வைத்துக்
கூறுவனவும் பிறவுங் கொள்க.

“அரவளை மென்றோ ளனுங்கத் துறந்து
கரவல மென்றாரைக் கண்ட திலையால்
இரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்காள்.”

“புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும்
பின்னிருங் கூந்தலென் றோழி நடையொக்கு
மன்னம் நனையாதி வாழி கடலோதம்”

என   வருவன   பிறவுங்   கொள்க.   ‘படுதல்’   எதிர்ப்படாமையை உணர்த்திற்று.    ஆண்டுத்   தன்மேல்    தவறேற்றாது    தலைவன் பொழுதறிந்து   வாராமையின்   மயங்கிற்றென்று  அமைவுதோன்றலின் ‘அமை’ வென்றார். அது,

“தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே”        (குறுந்.121)

என்றாற் போல வரும்.